துணை முதல்வர் பதவி கேட்கும் காங்கிரஸ்: திமுக கூட்டணியில் விரிசலா?

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா? இடம்பெறாதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இந்த முறை பெரும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் எந்த கூட்டணி கட்சிகளும் இருக்காது என்றும் 234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் திடீரென தற்போது வரை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி ஏற்பட்டால் துணை முதல்வர் பதவி தங்களுக்கு வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது 

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் உதவி வழங்க வேண்டும் என தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கருத்து ஏதும் சொல்லவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

From around the web