புதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி: ஆளுனரை சந்திக்கின்றார் நாராயணசாமி!

 

புதுவையில் சற்றுமுன்னர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை சந்திக்க நாராயணசாமி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

இன்று மாலை 5 மணிக்குள் புதுவையில் முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடிய உடன் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

tamilisai

இதனை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டபோது முதல்வர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேறினார்கள். இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது என சபாநாயகர் முறைப்படி அறிவித்தார்

இதனை அடுத்து நான்கு ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சி அங்கு கவிழ்ந்தது. இந்த நிலையில் சற்று முன் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்திக்க சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை ஆளுநர் முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web