மோடியை அடுத்து ராகுல் காந்தியை சந்தித்த கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தாஜ்மஹால், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம், அமிர்தசரஸ் பொற்கோவில் உள்பட பல இடங்களை மனைவி மற்றும் குழந்தைகளுடன் கண்டு ரசித்த கனடா பிரதமர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை செய்தார் இந்த நிலையில் இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இந்த தகவலை ராகுல்காந்தி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ராகுல்காந்தி தனது
 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தாஜ்மஹால், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம், அமிர்தசரஸ் பொற்கோவில் உள்பட பல இடங்களை மனைவி மற்றும் குழந்தைகளுடன் கண்டு ரசித்த கனடா பிரதமர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை செய்தார்

இந்த நிலையில் இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இந்த தகவலை ராகுல்காந்தி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ராகுல்காந்தி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, ‘ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களை இன்று சந்தித்து பேசினேன். அவருடனான இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினோம். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். எனது தாயார் உடல் நிலை குறித்து ஜஸ்டின் கேட்டறிந்தார் என பதிவிட்டுள்ளார்.

From around the web