தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் விஜயசாந்தியா?

கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா தேர்தலுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்த நடிகை விஜயசாந்தி திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அவருக்கு அங்கு முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்திருந்தால் விஜயசாந்திக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையும்
 

தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் விஜயசாந்தியா?

கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா தேர்தலுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்த நடிகை விஜயசாந்தி திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அவருக்கு அங்கு முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்திருந்தால் விஜயசாந்திக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு விஜயசாந்தி பிரச்சாரம் செய்வார் என்றும், அவருக்கு தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த முறையும் அவர்தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என கூறப்படுகிறது.

தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் விஜயசாந்தியா?ஆனால் இந்த முறையும் சந்திரசேகரராவ் அமோக வெற்றி பெறுவார் என்று அடுத்தடுத்து வந்த கருத்துக் கணிப்புகள் கூறி வருவதால் விஜயசாந்தி முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

From around the web