மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் வாழ்த்து!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
 
மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் வாழ்த்து!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதற்கேற்ப தமிழகத்தில் உள்ளவர்கள் முன்னொரு காலத்தில் தலை சிறந்த இடத்தை பிடித்தனர். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினமே தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாள் என்றும் அழைப்பர். ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை ஒன்றாம் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

new year

இதனால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர் காரணம் என்னவெனில் தமிழர் திருநாள் இல்லை சித்திரைத் திருநாளே தமிழர் புத்தாண்டா? என்ற குழப்பம் நிலவியது. அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஆக சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் அனைவரும் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடுவர். வேறு சிலர் காலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து புத்தாண்டை கொண்டாடுவர்.

இந்த சிறப்பு பெற்ற தமிழ் புத்தாண்டுக்கு உலகமெங்கும் வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளன. மேலும் தமிழகத்தில் பல தலைவர்களும் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறினார். மேலும் இன்றைய தினம் காலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் எழுத்துக்களால் வாழ்த்துக் கூறியுள்ளார். 

இவர்கள் மத்தியில் தற்போது மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக உள்ள பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு கூறியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தமிழில் பதிவிட்டு போட்டோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். இதனால் தமிழர்களுக்கு அவரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்று பல தலைவர்களும் காலை முதலே தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From around the web