ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்; அவர் மட்டும் இல்ல நானும் அன்றே தான் பதவியேற்க உள்ளேன்!

புதுச்சேரி முதலமைச்சராக மே 7ஆம் தேதி பதவி ஏற்க உள்ளேன் என்று கூறியுள்ளார் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி!
 
stalin

தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியிலும் அதே தினத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பெரும்பான்மை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது திமுக கட்சி.rangasamy

மேலும் திமுக சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். மேலும் திமுக தான் தனித்து போட்டியிட்ட தொகுதிகளில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 133 தொகுதிகளில் உதயசூரியன் உதித்துள்ளது. மு க ஸ்டாலின்  மே 7ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி.

மேலும் புதுச்சேரியிலும் என் ஆர் காங்கிரஸ்  கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் புதுச்சேரியில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி. அவர் தற்போது சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் .அதன்படி புதுச்சேரி முதலமைச்சராக மே 7ஆம் தேதி பதவியேற்க உள்ளேன் என அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு க ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறினார்.

From around the web