அன்பு நண்பர் விஜயகாந்த் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்- முதல்வர்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விஜயகாந்த் முழு உடல் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்!
 
stalin

தமிழகத்தில் முன்னொரு காலத்தில் இளைஞர்கள் பட்டாளத்தை தனமாக பிடித்து இருந்த கட்சி என்று அழைக்கப்பட்டது தேமுதிக. காரணம் என்னவெனில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உள்ளார். மேலும் அவரின் சினிமா வசனங்கள் ஒவ்வொன்றும் அப்போதுள்ள காலத்தில் ரஜினி கமலுக்கு மிகவும் போட்டியாக இருந்தன. இதனாலேயே  தோரணை தைரியத்தையும் இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர் சந்தித்த முதலாவது சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார் அதுவும் குறிப்பிடத்தக்கது.vijayakanth

மேலும் அதன் பின்னர் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அவர் பங்கேற்கவில்லை மேலும் இதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலிலும் அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது கட்சி பின்னடைவை சந்தித்தாலும் கேப்டன் விஜயகாந்துக்கு இன்றளவும் மக்கள் மனதில் நல்லதொரு ஆதரவும் நல்லதொரு இடமும் உள்ளது என்றே கூறலாம்.

 தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர் பொதுவான உடல் பரிசோதனை காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் நலம் பெற நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழு நலம் பெற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து அனுப்பி உள்ளார். மேலும் அன்பு நண்பர் விஜயகாந்த் முழு உடல் நலம் பெற்று தனது அரசியல் பணிகளை மேற் கொள்ள விழைகிறேன் என்றும் நம் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web