கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம்: மத்திய அரசு

 
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம்: மத்திய அரசு

மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் என்ற நுழைவுத்தேர்வு வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் நர்ஸ் உள்ளிட்ட ஒருசில படிப்புகளுக்கு நீட் தேர்வு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

college

இந்த நிலையில் கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் கலை அறிவியல் உயர் கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுவரை நுழைவுத்தேர்வு இல்லாமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி படிப்புகளை படித்து வந்த மாணவர்கள் இனி நுழைவு தேர்வை கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web