மின்சாரத்தை துண்டித்து பணப்பட்டுவாடா! காங்கிரஸ் தரப்பிலிருந்து புகார்!

மின் இணைப்பைத் துண்டித்து விட்டு பண பட்டுவாடா செய்வதாக காங்கிரஸ் தரப்பினர் புகார்!
 
மின்சாரத்தை துண்டித்து பணப்பட்டுவாடா! காங்கிரஸ் தரப்பிலிருந்து புகார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியான திமுக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் திமுக தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் தமிழகம் அனைத்தும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

saagu

காங்கிரசின் பிரியங்கா காந்தி தமிழகம் சுற்றுப்பயணம் ஆனது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில்  தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து புகார் ஒன்று எழுப்பப்பட்டது. மேலும் அந்த புகாரினை தேர்தல் தலைமை அதிகாரி புகார் அளித்துள்ளனர்.

அதன்படி இரவில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடா நடப்பதாகவும் , சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் மின்சார வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தேர்தல் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

From around the web