உலகநாயகன் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகாரியிடம் புகார்!

உலகநாயகன் கமலஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் அதிகாரிகளிடம் கமலஹாசன் புகார் அளித்தார்!
 

சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியது. அதற்காக தமிழகத்தில் வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சாவடிகளிலும் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர் கண்காணிப்பில் மிகவும் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மேலும் வாக்காளர்களும் காலை முதல் தொடங்கி வாக்குப்பதிவிட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு சானிடைசர்,முககவசம், கையுறை போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

kamal

மேலும் அவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்கப்பட்டு  அவர்களை வாக்களிக்க அனுமதிக்கின்றனர். மேலும் சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள்  உள்ளன. குறிப்பாக உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. மேலும் இந்த கட்சி அது சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.

 முதல்வர் வேட்பாளராக உலகநாயகன் கமலஹாசன் அறிவிக்கபட்டு கோவை தெற்கு தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் தற்போது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் அவர் கூறுகிறார். கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்குவதாகவும், வழங்கியது தொடர்பான நகல் தன்னிடம் உள்ளதாகவும் உலகநாயகன் கமலஹாசன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

From around the web