மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியா? டிடிவி தினகரன் பேட்டி

 

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் ஆர்கே நகரில் போட்டியிடப்போவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று சென்னை திரும்பி உள்ளதை அடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது வரும் தேர்தலில் தான் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், அதுமட்டுமின்றி தேனி தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார் 

sasikala

சசிகலா போட்டியிடுவதற்கு சட்ட சிக்கல் இல்லாமல் இருந்தாலும் வரும் தேர்தலில் அவரும் போட்டியிடுவார் என்று கூறினார். மேலும் சசிகலாவை அமமுகவினர் வரவேற்றது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்றும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலாதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் சசிகலாவின் உடல் நலம் குறித்து தன்னிடம் ரஜினிகாந்த் போனில் விசாரித்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு தான் நன்றி தெரிவித்ததாகவும் டிடிவி தினகரன் கூறினார். அமமுக புத்துணர்ச்சியுடன் வரும் தேர்தலில் களமிறங்குகிறது என்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே பின்னடைவு என்று கூறப்படுகிறது

From around the web