மின்வெட்டு ஏற்பட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

 

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அவ்வப்போது நடைபெறும் என்பதும் குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் பல மணி நேரம் மின்வெட்டு என்பது சர்வ சாதாரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மின்வெட்டு குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டால் நுகர்வோருக்கு முதல் இரண்டு மணி நேரத்திற்கு ரூபாய் 50 இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ரூபாய் 100 இழப்பீடு டெல்லி மின் வாரியம் வழங்கும் என்றும் அறிவித்துள்ளார் 

kejriwal

இந்த அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அமலுக்கு தமிழகம் போன்ற மாநிலத்திற்கு அமலுக்கு வந்தால் தமிழக மக்கள் மின் கட்டணமே கட்ட வேண்டிய நிலை ஏற்படாது என்றும் ஒரு சில நெட்டிசன்கள் காமெடியாக பதிவு செய்து வருகின்றனர்.

From around the web