ஸ்டெர்லைட் அரசே ஏற்று நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் அறை முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கோரியுள்ளது!
 
ஸ்டெர்லைட் அரசே ஏற்று நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் தமிழகத்தில் மிக வலிமையான திமுக உடன் கூட்டணியாக தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் மிகவும் புகழ்பெற்ற கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.mutharasan

 தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் சில வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று எடுத்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆலை முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் தான் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிசனை தமிழக அரசு அனுமதியின்றி மற்ற மாநிலங்களுக்கு தரக்கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும் இன்றய தினம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டங்களிலும் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 மாத காலத்திற்கு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நான்கு மாத காலமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சாரத்தை தமிழக மின்துறை வாரியத்தின் மூலம் வினியோகிக்கப்படும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web