பட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலை உயர்வு- அதிர்ச்சியில் மக்கள்

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்கவில்லை என்ற கருத்தை மிக வலுவாக வலியுறுத்துகிறது. நிறைய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது, இது நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய சலுகைகள் அறிமுகமாகியுள்ளன. சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் 2030 வரை 50 லட்சம் கோடி முதலீடு, விவசாயிகள் வருமானம்
 

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்கவில்லை என்ற கருத்தை மிக வலுவாக வலியுறுத்துகிறது. நிறைய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது, இது நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலை உயர்வு- அதிர்ச்சியில் மக்கள்

பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய சலுகைகள் அறிமுகமாகியுள்ளன. சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் 2030 வரை 50 லட்சம் கோடி முதலீடு, விவசாயிகள் வருமானம் இரு மடங்கு உயர ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’, எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் அதிரடி வருமான வரிச்சலுகை, தங்கத்தின் மீதான இறங்குமதி வரி 10%ல் இருந்து 12.5%ஆக உயா்வு, குறைந்த விலை வீடு வாங்குவோருக்கு கூடுதல் வரிவிலக்கு, உயர்கல்விக்காக புதிய ஆணையம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன.

இது தவிர தனியாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் நிறைய பொருட்களின் விலையை தாறுமாறாக விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல், தங்கம், முந்திரி, பிவிசி, வினைல், டைல்ஸ், ஆட்டோ பாகங்கள், செயற்கை ரப்பர், மார்பிள் ஸ்லாப், ஐபி கேமிரா, சிசிடிவி கேமிரா, ஆப்டிகல் ஃபைபர் கேபிள், சிகரெட் போன்றவற்றின் விலை அதிகமாகியுள்ளது.

From around the web