முகவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார் ஆணையர்!இவர்களுக்கு நாளை ஊரடங்கு இல்லை!

வாக்குச்சாவடி முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரலாம் என்று அறிவித்துள்ளார் ஆணையர்!
 
முகவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார் ஆணையர்!இவர்களுக்கு நாளை ஊரடங்கு இல்லை!

தமிழகத்தில் முன்னர் அறிவித்திருந்த தேதிப்படி சட்டமன்றத் தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு  சனிடைசர் முகக்கவசம் கையுறை போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் கவனிக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் அதிகாரிகள்.  தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரம் நடைபெறுகிறது.vote

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பும் மத்தியில் கவனமாக பார்க்கப்படுகிறது நாளைய தினம் எப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படும் என்று குழம்பிய நிலையில் தற்போது சென்னை மாநகர ஆணையர் பல விதிமுறைகளை கூறியுள்ளார். அந்தப்படி நாளை முழு ஊரடங்கு வேட்பாளர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்னையிலுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும் தேர்தல் அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கொடுத்த அடையாள அட்டையுடன் வரலாம் என்றும் அறிவித்துள்ளார். காரணம் என்னவெனில் நானே தினம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. அதனால் தமிழகத்தில் வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதனால் தான் நாளைய தினம் இத்தகைய அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல முடியாது என்று எண்ணிய நிலையில் தற்போது ஆணையர் அவர்களுக்கு உதவும் விதமான தகவலை கூறியுள்ளார்.

From around the web