அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க முதல்வர் எடப்பாடி கோரிக்கை

இந்திய வான் எல்லைக்குள் 27-ம் தேதி பாகிஸ்தான் வான்படைகள் அத்துமீறிய போது இந்திய விமானப்படை அடித்து விரட்டியது. பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, இந்தியாவின் மிக் 21 விமானமும் சிக்கிக்கொண்டது. அதில் சென்ற அபிநந்தன் உயிர்தப்பிய போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து விட்டார். பின்னர் இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தம் காரணமாக இரு நாட்களில் அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்நிலையில், அண்டை நாட்டில் தனது வீரத்தை வெளிப்படுத்திய இந்திய விமானப்படை வீரர்
 

இந்திய வான் எல்லைக்குள் 27-ம் தேதி பாகிஸ்தான் வான்படைகள் அத்துமீறிய போது இந்திய விமானப்படை அடித்து விரட்டியது. பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, இந்தியாவின் மிக் 21  விமானமும் சிக்கிக்கொண்டது.

அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க முதல்வர் எடப்பாடி கோரிக்கை

அதில் சென்ற அபிநந்தன் உயிர்தப்பிய போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து விட்டார். பின்னர் இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தம் காரணமாக இரு நாட்களில் அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. 

இந்நிலையில், அண்டை நாட்டில் தனது வீரத்தை வெளிப்படுத்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் சாதனையை பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கி அபிநந்தனை கௌரவப்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

From around the web