வரும் 7ஆம் தேதி காலை 9 மணி முதல் விடியல் தர வருகிறார்: ஸ்டாலின்!

வரும் 7ம் தேதி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது!
 
stalin

தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கையானது மே 2ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிக தொகுதியை கைப்பற்றி 10 ஆண்டுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் திமுக கட்சி. மேலும் திமுக கட்சியானது தான் போட்டியிட்ட தொகுதிகளில் 125 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.stalin

மேலும் ஒட்டுமொத்தமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர்கள் 133 பேர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பெரும்பான்மையை பெற்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது திமுக. திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார் மு க ஸ்டாலின். நேற்றைய தினம் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

அந்த கூட்டத்தின் முடிவில் ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இந்நிலையில் தற்போது மு க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப்படி அவர் வரும் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு அதாவது நாளை மறுநாள் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை பதவியேற்கும் விழாவும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் ஏழாம் தேதி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தமிழகத்திற்கு நல்லதொரு திட்டங்களையும் கொண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web