தடுப்பூசி போட்டிருந்ததால் பெரிய பாதிப்பில்லை காமெடி நடிகர்!

முன்னதாக தடுப்பூசி போட்டு இருந்ததால் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறுகிறார் பிரபல காமெடி நடிகர் செந்தில்!
 
தடுப்பூசி போட்டிருந்ததால் பெரிய பாதிப்பில்லை காமெடி நடிகர்!

தற்போது மக்களுக்கு காமெடி நடிகர்களாக தமிழகத்தில் யோகி பாபு சந்தானம் சூரி போன்ற பல நட்சத்திரங்கள்  உள்ளனர்  முன்னொரு காலத்தில் கவுண்டமணி செந்தில் வடிவேல் விவேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் மக்களுக்கு சிரிப்பு மழை பொழிந்தனர். அதன்படி கூட்டணி காமெடி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது கவுண்டமணி -செந்தில். கவுண்டமணி நடித்த படத்தில்

corona

செந்தில் நடிக்காமல் இருப்பதே இல்லை என்றும் கூறும் அளவிற்கு அவர்களின் கூட்டணி காமெடியானது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

சில தினங்களுக்கு முன்பாக செந்தில் பாஜகவில் இணைந்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தற்போது கொரோனா ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவருக்கு முன்னதாக தடுப்பூசி  போடப்பட்டதால் அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் மக்களிடமும் தடுப்பூசி போடுங்கள் எனவும் கூறினார். மேலும் கொரோனா இருந்தால் மருத்துவர்கள் கூறும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் அவர் கூறினார். மேலும் இன்றைய தினம் வெளியாகிய வீடியோவில் அவருக்கு நாளைய தினம் மீண்டும் பரிசோதனை உள்ளதாகவும் அதில் நெகட்டிவ் என்று வந்தால் அவர் வீட்டுக்கு சென்று தனிமைபடுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்

From around the web