அக்டோபர் 1 முதல் கல்லூரிகளை திறக்க வேண்டும்: யூஜிசி உத்தரவு

 
UGC

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. எனினும் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று தமிழக அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. ஆகஸ்ட் முதல் வாரம் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றால் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் கல்லூரி திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் 2021 - 22 கல்வி ஆண்டிற்கான கல்லூரி சேர்க்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

மேலும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த கல்வியாண்டிற்கான கல்லூரி மற்றும் பல்கலைக் கழக தேர்வுகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் புதிய கல்வி அமர்வு ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என்றும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

From around the web