வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்: அரசாணை வெளியீடு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது என்பதும் விரைவில் மற்ற மாணவர்களுக்கும் திறக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்தது.

அதேபோல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது என்பதும், விரைவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே.

students

இந்த நிலையில் தற்போது கல்லூரி திறப்பது குறித்த அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் வாரத்திற்கு ஆறு நாட்கள் வகுப்பு செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மாணவர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வகுப்பறையில் உட்கார வேண்டும் என்றும் அவ்வப்போது சானிடைசர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் என்ற அறிவிப்பு கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web