ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவன் ரயில் மோதி பலி

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன் அங்கு உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்லும்போது ரயில் நிலையத்தில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது காதில் ஹெட் செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் ரயில் வரும் சத்தம் அந்த மாணவருக்கு கேட்கவில்லை. இதனை அடுத்து தண்டவாளத்தை கடக்க முயன்ற
 
ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவன் ரயில் மோதி பலி

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன் அங்கு உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்லும்போது ரயில் நிலையத்தில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது

காதில் ஹெட் செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் ரயில் வரும் சத்தம் அந்த மாணவருக்கு கேட்கவில்லை. இதனை அடுத்து தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவன் மீது ரயில் மோதியதில் அந்த மாணவன் சிதறி கீழே விழுந்தார்

சம்பவ இடத்தில் மரணமான அந்த மாணவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தை கடந்தது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

From around the web