இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு: யுஜிசி அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே இந்த நிலையில் ஆந்திராவில் ஜூலை 13-ஆம் தேதி நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம் இந்த நிலையில் தற்போது கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என யுஜிசி அனுமதி
 
இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு: யுஜிசி அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே

இந்த நிலையில் ஆந்திராவில் ஜூலை 13-ஆம் தேதி நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று யூஜிசி அறிவித்துள்ளது

இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்களுக்கான செமஸ்டர் தேர்வை முதலில் நடத்தி முடிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து மிக விரைவில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web