ஏழைகளின் ஊட்டிக்கு செல்ல தடை ஆட்சியர் அதிரடி!காரணம் கொரோனா!

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு இற்கு செல்ல தடை விதித்துள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர்!
 
ஏழைகளின் ஊட்டிக்கு செல்ல தடை ஆட்சியர் அதிரடி!காரணம் கொரோனா!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களையும் கைப் பக்குவமும் விதவிதமாக வித்தியாசமாகவும் காணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுலா தலமாக பொதுவாகக் காணப்படுவது கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. இது தமிழர்களின் சுற்றுலாத்தளம் மட்டுமின்றி உலகம் விரும்பும் சுற்றுலா விரும்பிகளின் சுற்றுலாத் தலமாக உள்ளது தமிழர்களுக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.

yercaud

தமிழகத்தில் ஊட்டி கொடைக்கானல் போன்றவையும் சுற்றுலா தளங்களாக உள்ளன.  இங்கு பலரும் சென்று மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுவது ஏற்காடு. ஏற்காடு சேலம் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்கள் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார். பல பகுதிகளில் சுற்றுலா தளங்கள் கொரோனா காரணமாக மூடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக கருதப்பட்டு மிகவும் வேகமாக பரவுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து கழகம் சார்பிலும் சில தகவல்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web