கோயம்புத்தூர் திருப்பூர் தொடர்ந்து தற்போது ஈரோட்டில் களமிறங்கியுள்ளார் முதல்வர்!

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதாக தகவல் நின்றது!
 
stalin

தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் திமுக கட்சியானது  10 ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சியை தன்வசம் இழுத்து உள்ளது என்றே கூறலாம். மேலும் திமுகப் ஆனது தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஓரளவுக்கு பிடித்தது என்று கூறலாம். ஆனால் திமுக தேர்தலில் கொங்கு நாடு என்று அழைக்கப்படுகின்ற மேற்கு மண்டலத்திவில்லை என்றே கூறப்படுகிறது. அதன்படி அங்கு அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம் பி வேலுமணி, முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் போன்ற பல அமைச்சர்கள் அந்த கொங்கு மண்டலத்திலேயே இருப்பதால் அங்கு திமுகவால் பெரும்பான்மையை பிடிக்கவில்லை என்றே கூறலாம்.stalin

 தமிழகத்தில் தற்போது ஊரடங்கு காலகட்டம் நடைமுறையில் உள்ளது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் கொரோனா நோயின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது அதுவும் குறிப்பாக கோயம்புத்தூர் ஈரோடு தருமபுரி திருப்பூர் பகுதிகளில் இந்த கொரோனா நோயின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. கடந்த 20 நாட்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோயம்புத்தூர் திருப்பூர் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.  இன்று காலை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மேலும் அங்குள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி ஆணையை வழங்கி வருகிறார். பெருந்துறை  அரசு மருத்துவமனையில் கூடுதலாக 300 ஆக்சிசன் படுக்கைகளைக் கொண்ட கொரோனா  சிகிச்சை மையத்தை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா  அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் இத்தகைய ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

From around the web