கோவை தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள்-உறவினர்களிடையே மோதல்!

கோவை சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது!
 
hospital

தற்போது இந்தியாவில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. காரணம் இந்தியாவில் தற்போது வரை கண்ணுக்கு தெரியாத நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதன் விளைவாக பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மட்டுமின்றி நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சில நோயாளிகள் தங்களது வீடுகளிலேயே மருத்துவ முறைகளில் பின்பற்றி வருகின்றனர்.private hospital

அவ்வப்போது நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தெரிகிறது. இதன் விளைவாக நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்கள் என்று பாராமல் அவர்களை சரமாரியாக தாக்குகின்றனர். மேலும் இவை தொடர்ந்து நம் இந்தியாவில் அதிகமாக நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது.  தமிழகத்தில் தற்போது கோயம்புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றுள்ளது.

மேலும்  நோயாளியின்  சிகிச்சை விவரம் மற்றும் பில் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரணமாக இத்தகைய மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அபிராமி மருத்துவமனை அளித்த புகாரின் பேரில் நோயாளியின் உறவினர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

From around the web