கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்: பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது தெரிந்ததே. பாமர மக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம் குறிப்பாக நேற்று சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி அவர்கள் கொரோனாவால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் காவல்துறையினர்களை அடுத்து தற்போது மாவட்ட ஆட்சியர்
 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்: பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது தெரிந்ததே. பாமர மக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

குறிப்பாக நேற்று சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி அவர்கள் கொரோனாவால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் காவல்துறையினர்களை அடுத்து தற்போது மாவட்ட ஆட்சியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கே கொரோனா பாதித்துள்ளது மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

From around the web