கூட்டணி கட்சிகள் மிரட்டினால் தனித்துப் போட்டி: திமுக அதிரடி முடிவு?

 

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்றும் அது மட்டுமன்றி உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றும் எங்களுடைய சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்

மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டு, அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

இந்த நிலையில் இதனை ஏற்றுக்கொள்ளாத கூட்டணி கட்சிகள் தங்களுடைய சின்னம் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் திமுக பயப்படப் போவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறை கண்டிப்பாக திமுக ஆட்சிதான் என்றும், அதிமுகவுக்கு நேரடி போட்டி திமுக தான் என்று முடிவு செய்துள்ள திமுக கூட்டணி கட்சிகள், தங்களுடன் இருக்கும் கூட்டணியில் இருந்து விலகினாலும் பரவாயில்லை, அனைத்து தொகுதிகளிலும்  தனித்து போட்டியிடுவோம் என்று திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

அதிமுகவும் திமுகவும் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஏராளமான சில்லரை கட்சிகளும் லெட்டர் பேடு கட்சிகளும் கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது ஒருசில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கை வைத்து கொண்டு அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் மிரட்டிக் கொண்டிருக்கும் சின்ன கட்சிகளுக்கு இந்த தேர்தலோடு முடிவு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web