முதலமைச்சர்: பாராட்டு மற்றும் ஒருங்கிணைக்க கட்டளை மையம் உறுதி!

தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க கட்டளை மையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்!
 
stalin

தற்போது நம் நாடெங்கும் கொரோனா காலம் என்றே கூறலாம். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு தங்களை வீடுகளிலேயே பாதுகாத்து வருகின்றனர். ஒருசிலர் அரசினை பேச்சினை மதிக்காமல் சாலையோரங்களிலும் தெருக்களிலும் அவ்வப்போது சுற்றி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் கடுமையாக தண்டனை கொடுக்கின்றனர். ஆயினும் அவர்கள் தங்களது பழக்கத்தை மாற்றவே இல்லை என்று கூறலாம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாடெங்கும் தன்னார்வலர்கள் பலரும் இதனை சேவையாக செய்து வருகின்றனர்.service

மேலும் அவர்கள் கொரோனா காலத்திலும் ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் அவர்களோடு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தற்போது முதல்வர் பாராட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் என முதல்வர் கூறியுள்ளார். மேலும் தடுப்பு பணியில் அவர்களின் பணி பாராட்டத்தக்கது எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க கட்டளை மையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் இவற்றை ஆலோசனை கூட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவன உடன் முதலமைச்சர் உரையாற்றிய தடுக்கப்படுகிறது .மேலும் நம் தலைமைச் செயலர் மற்றும் சுகாதார துறை செயலர் மற்றும் அமைச்சர் சுப்பிரமணியனும் பங்கேற்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணி போற்றுதலுக்குரியது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். கொரோனா எதிரான போரில் அரசுடன் தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும் கொரோனா இறந்தவர்களின் சடலங்களை கண்ணியமாக தன்னார்வலர்கள் அடக்கம் செய்கின்றனர் என்றும் அவரை பாராட்டியுள்ளார்.

From around the web