நாடாளுமன்றத்தை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்: சோனியாகாந்தி ஆவேசம்

கடந்த சில மாதங்களாக உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த சோனியா காந்தி இன்று மும்பையில் நடந்த இந்தியா டுடே கன்கிளேவ் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நமது சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. நாட்டில் ஒருவர் கருத்துக்களை மற்றொருவர் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்பின்மை வளர்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களிடையே ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது,
 

கடந்த சில மாதங்களாக உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த சோனியா காந்தி இன்று மும்பையில் நடந்த இந்தியா டுடே கன்கிளேவ் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நமது சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. நாட்டில் ஒருவர் கருத்துக்களை மற்றொருவர் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்பின்மை வளர்ந்து வருகிறது.

சிறுபான்மை மக்களிடையே ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது, அவர்கள் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களைத் தட்டிக்கேட்க வேண்டிய, நியாயத்தை கேட்க வேண்டிய குரல்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றன. இதன் காரணமாக, மத துவேஷங்களை தூண்டிவிட்டு, பதற்றம் அதிகரித்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பாஜக மக்களிடையே பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி வருகிறது. நமது நாடு மிகப்பெரிய வன்முறைகளுக்கு மத்தியில் இருந்துவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் இருந்து கொண்டு எதிர்கட்சிகளின் குரல்களை நசுக்கி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாவிட்டால், அவர்கள் பேச்சு சுதந்திரத்தை பறித்தால், நாடாளுமன்றத்தை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்று விடலாமே. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய அரசுபோன்று இப்போதுள்ள அரசு இல்லை. இப்போதுள்ள பாஜக அரசு நாடாளுமன்ற விதிகளையும், செயல்முறைகளையும் மதிப்பதில்லை.

From around the web