அனைத்து பள்ளிகளையும் மூடுங்கள்: துணை முதல்வர் உத்தரவு

 

மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூடுங்கள் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்கள் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட அனைத்து இந்திய மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் மட்டும் மத்திய அரசின் தளர்வுகள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்தெந்த நாடுகளில் எல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்ட அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் அதிக அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் எனவே டெல்லியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் டெல்லி துணை முதல்வர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் 

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இதனால்தான் இன்னும் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web