கடற்கரை அசுத்தம் செய்தவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய காவலர்

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையை அசுத்தம் செய்த கல்லூரி மாணவர்களுக்கு, நூதன முறையில் தண்டனை அளித்து திருத்தியுள்ளார் காவலர் ஒருவர். சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலைய முதல் நிலைக் காவலரான எபின் கிறிஸ்டோபர் என்பவர் கடந்த வெள்ளியன்று பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைக்கு ரோந்துப் பணிக்கு சென்றுள்ளார். அங்கு ஓரிடத்தில் கேக் வைக்கும் காகித அட்டைகள் குப்பையாகக் கிடந்ததைக் கண்ட அவர், சிசிடிவி கேமரா பதிவை பார்த்ததில், சிலர் அங்கு பிறந்தநாள் கொண்டாடியது தெரிய வந்தது. அட்டையில்
 

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையை அசுத்தம் செய்த கல்லூரி மாணவர்களுக்கு, நூதன முறையில் தண்டனை அளித்து திருத்தியுள்ளார் காவலர் ஒருவர்.

கடற்கரை அசுத்தம் செய்தவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய காவலர்

சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலைய முதல் நிலைக் காவலரான எபின் கிறிஸ்டோபர் என்பவர் கடந்த வெள்ளியன்று பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைக்கு ரோந்துப் பணிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஓரிடத்தில் கேக் வைக்கும் காகித அட்டைகள் குப்பையாகக் கிடந்ததைக் கண்ட அவர், சிசிடிவி கேமரா பதிவை பார்த்ததில், சிலர் அங்கு பிறந்தநாள் கொண்டாடியது தெரிய வந்தது. அட்டையில் இருந்த பேக்கரி எண்ணில் தொடர்பு கொண்டபோது, இளைஞர் ஒருவர் 9 கேக்குகள் வாங்கிச் சென்றதாக கூறியுள்ளனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்ததால், அதில் இருந்த தொலைபேசி எண்ணை கிறிஸ்டோபர் தொடர்புகொண்டபோது, தனக்கு தொடர்பு இல்லை என கேக் வாங்கிய இளைஞர் மறுத்துள்ளார்.

சிசிடிவி ஆதாரம் இருப்பதாகக் கூறி அந்த இளைஞரையும், அவருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களையும் கடற்கரைக்கு வரவழைத்தார் கிறிஸ்டோபர்.

துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை அவர்களிடம் கொடுத்து குப்பை போட்ட இடத்தை சுத்தம் செய்துவிட்டு செல்லுமாறு கூறிய அவர், இதனை தண்டனையாகக் கருதக் கூடாது எனக் கூறி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என அறிவுரை வழங்கினார்.

நடந்த நிகழ்வுகளை அறிந்த காவல் துணை ஆணையர் செஷாங்க் சாய், ஆய்வாளர் உள்ளிட்டோர் காவலர் கிறிஸ்டோபரின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்

From around the web