முதலாம் ஆண்டு பிஈ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!

 

நவம்பர் 23ம் தேதியிலிருந்து பிஈ முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் செப்டம்பர் மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தற்போது இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி முதலாமாண்டு பிஈ மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவித்துள்ளது

சமீபத்தில் ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்யப்பட்டது என்பதும் சான்றிதழ்கள் சரிபார்க்கபப்ட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web