மெரீனா கடற்கரைக்கு தடையால் பட்டினப்பாக்கத்தில் குவியும் பொதுமக்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் நேற்று முதல்முறையாக நீண்ட இடைவெளிக்குப்பின் தளர்வுகள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை வந்ததை அடுத்து மெரினா கடற்கரைக்கு செல்ல மக்கள் முன் வந்தனர். ஆனால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை 

இதனை அடுத்து பட்டினப்பாக்கம் கடற்கரையில் பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அங்கு கூட்டம் கூடுவதை அடுத்து திடீரென கடைகளும் முளைத்துவிட்டது. மீன்கள் சுடச்சுட சுவையுடன் கிடைப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் 

பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகி வருவதை அடுத்து மெரினா கடற்கரையில் விரைவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு விரைவில் ஆலோசனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மால்கள் போன்றவைகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தனிமனித இடைவெளியை எளிதில் கடைபிடிக்கும் வகையில் இருக்கும் மெரீனா கடற்கரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது

From around the web