படப்பிடிப்புக்கு அனுமதி, அரசு அலுவலகங்கள் செயல்படும்: மேலும் என்னென்ன தளர்வுகள்

சற்றுமுன் தமிழக அரசு அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதையும், தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம். தற்போது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்க அனுமதி இல்லை. மறு உத்தரவு வரும்வரை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடரும். மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார, அரசியல் மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளிக்கு தடை நீட்டிப்பு. கல்வி
 

படப்பிடிப்புக்கு அனுமதி, அரசு அலுவலகங்கள் செயல்படும்: மேலும் என்னென்ன தளர்வுகள்

சற்றுமுன் தமிழக அரசு அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதையும், தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம். தற்போது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு:

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்க அனுமதி இல்லை. மறு உத்தரவு வரும்வரை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடரும். மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார, அரசியல் மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளிக்கு தடை நீட்டிப்பு. கல்வி விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தக் கூடாது

அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்கும். வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்

ஹோட்டல்களில் இரவு 9 மணி வரை மட்டுமே பார்சல் சேவைக்கு அனுமதி. மால்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் அனைத்தும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் இயங்கலாம். இரவு 9 மணிக்கு வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி. 11. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.

திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி.

From around the web