கேன் வாட்டர் உற்பத்தி திடீர் நிறுத்தம்: சென்னை மக்களுக்கு திண்டாட்டம்

சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவையின் பெரும்பகுதியை கேன் வாட்டர்தான் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கேன் – வாட்டர் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேன் வாட்டரையே நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு நாளை முதல் திண்டாட்டம்தான் என்று கூறப்படுகிறது தமிழகம் முழுவதும் ஏற்கனவே தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தண்ணீர்
 

கேன் வாட்டர் உற்பத்தி திடீர் நிறுத்தம்: சென்னை மக்களுக்கு திண்டாட்டம்

சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவையின் பெரும்பகுதியை கேன் வாட்டர்தான் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கேன் – வாட்டர் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேன் வாட்டரையே நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு நாளை முதல் திண்டாட்டம்தான் என்று கூறப்படுகிறது

தமிழகம் முழுவதும் ஏற்கனவே தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். வேறு வழியில்லாமல் வேலைநிறுத்தம் முடியும் வரை கேன் வாட்டர் வாங்கி பயன்படுத்தலாம் என்ற நிலையில் தற்போது அதற்கும் ஆபத்து வந்துள்ளது.

நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் வாட்டர் உற்பத்தி நிலையங்களும் இன்று மாலை முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web