ஆபத்தான சூழலை சந்தித்தோம்: சபரிமலைக்கு சென்று திரும்பிய கவிதா பேட்டி

சபரிமலைக்கு இன்று சென்று திரும்பிய பெண் செய்தியாளர் கவிதா, தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே சன்னிதானத்திற்கு சிறிது தூரம் வரை சென்றுவிட்ட கவிதா என்ற பெண் செய்தியாளரும், அவருடன் சென்ற பாத்திமா என்ற பெண்ணும் கேரள அரசின் அதிரடி நடவடிக்கையால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஐயப்பனை தரிசிக்காமல் இரண்டு பெண்களும் திரும்பினர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவிதா, தற்போது மிகவும் பெருமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும்
 
kavitha

ஆபத்தான சூழலை சந்தித்தோம்: சபரிமலைக்கு சென்று திரும்பிய கவிதா பேட்டி

சபரிமலைக்கு இன்று சென்று திரும்பிய பெண் செய்தியாளர் கவிதா, தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே சன்னிதானத்திற்கு சிறிது தூரம் வரை சென்றுவிட்ட கவிதா என்ற பெண் செய்தியாளரும், அவருடன் சென்ற பாத்திமா என்ற பெண்ணும் கேரள அரசின் அதிரடி நடவடிக்கையால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஐயப்பனை தரிசிக்காமல் இரண்டு பெண்களும் திரும்பினர்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவிதா, தற்போது மிகவும் பெருமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இன்று தாங்கள் மிகவும் ஆபத்தான சூழலை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.

From around the web