மீ டூ தேவையில்லை: உருட்டுக்கட்டையல் புரட்டி எடுத்த பெண்

பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ‘மீ டூ’ ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வங்கி மேனேஜர் ஒருவரௌ உருட்டுக்கட்டையால் வெளுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகா வங்கி ஒன்றில் லோன் கேட்க சென்ற பெண்ணிடம் தவறாக மேனேஜர் நடந்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அந்த
 

மீ டூ தேவையில்லை: உருட்டுக்கட்டையல் புரட்டி எடுத்த பெண்

பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ‘மீ டூ’ ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வங்கி மேனேஜர் ஒருவரௌ உருட்டுக்கட்டையால் வெளுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா வங்கி ஒன்றில் லோன் கேட்க சென்ற பெண்ணிடம் தவறாக மேனேஜர் நடந்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அந்த மேனேஜரின் சட்டையை பிடித்து இழுத்து வெளியே அழைத்து வந்து கையில் கிடைத்த உருட்டுக்கட்டை மற்றும் செருப்பால் அடித்து நையப்புடைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

From around the web