சூரியன் மறையும், குளம் நிறையும், தாமரை மலரும்: தமிழிசையின் பதிலடி டுவீட்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல்லே முளைக்கவில்லை, இதில் தாமரை எப்படி மலரும் என பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே முடியாது என்பதை மறைமுகமாக குத்தி காட்டினார். மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு பாஜகவினர்களை ஆத்திரத்தை வரவழைத்த நிலையில் இதற்கு பதிலடியாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது; இனி மழை காலம்
 

சூரியன் மறையும், குளம் நிறையும், தாமரை மலரும்: தமிழிசையின் பதிலடி டுவீட்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல்லே முளைக்கவில்லை, இதில் தாமரை எப்படி மலரும் என பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே முடியாது என்பதை மறைமுகமாக குத்தி காட்டினார்.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு பாஜகவினர்களை ஆத்திரத்தை வரவழைத்த நிலையில் இதற்கு பதிலடியாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது;

இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்

 

From around the web