நெல் ஜெயராமன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

பாரம்பரிய நெல் வகைகளை காத்திட்ட நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருடைய உடலுக்கு விவசாய சங்கத்தின் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல்
 
kamal-neljayaraman

நெல் ஜெயராமன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

பாரம்பரிய நெல் வகைகளை காத்திட்ட நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருடைய உடலுக்கு விவசாய சங்கத்தின் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல் ஜெயராமனின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு செலவுகளையும் அவருடைய மகனின் படிப்பு செலவையும் நடிகர் சிவகாரத்திகேயன் ஏற்று கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web