திருவாரூர் தொகுதியில் போட்டியா இல்லையா? கமல் தகவல்

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் இந்த தொகுதியின் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் தங்களது கட்சியின் நிர்வாகிகளிடம் கூடி பேசி முடிவெடுக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொகுதியில் நான்குமுனை போட்டி
 


திருவாரூர் தொகுதியில் போட்டியா இல்லையா? கமல் தகவல்

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் இந்த தொகுதியின் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் தங்களது கட்சியின் நிர்வாகிகளிடம் கூடி பேசி முடிவெடுக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த தொகுதியில் நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட்டால் ஐந்து முனை போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது


From around the web