திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் அரசியல் கட்சிகளும், அந்த தொகுதியின் மக்களும் சுறுசுறுப்பு அடைந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தினால் அது நிவாரண உதவியை பாதிக்கும் என்ற காரணத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்தன இதனையடுத்து சற்றுமுன் திருவாரூர்
 


திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் அரசியல் கட்சிகளும், அந்த தொகுதியின் மக்களும் சுறுசுறுப்பு அடைந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தினால் அது நிவாரண உதவியை பாதிக்கும் என்ற காரணத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்தன

இதனையடுத்து சற்றுமுன் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் நிம்மதி அடைந்திருந்தாலும், அந்த தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


From around the web