மேகதாது அணையை அரசு கட்டாவிட்டால் நாங்கள் கட்டுவோம்: வாட்டாள் நாகராஜ்

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மேகதாது அணையை அரசு கட்டாவிட்டால் நாங்களே கட்டுவோம் என வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறிய வாட்டாள் நாகராஜ், ‘ மேகதாது மற்றும் மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து ஜனவரி 12 ஆம் தேதி, கர்நாடக தமிழக எல்லையான
 


மேகதாது அணையை அரசு கட்டாவிட்டால் நாங்கள் கட்டுவோம்: வாட்டாள் நாகராஜ்

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மேகதாது அணையை அரசு கட்டாவிட்டால் நாங்களே கட்டுவோம் என வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறிய வாட்டாள் நாகராஜ், ‘ மேகதாது மற்றும் மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து ஜனவரி 12 ஆம் தேதி, கர்நாடக தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்காவிட்டால், தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.


From around the web