தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் திடீர் நிறுத்தி வைப்பா?

கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வராத ஆசிரியர்களின் இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது இந்த எச்சரிக்கையை அடுத்து இன்று சென்னையில் 99% ஆசிரியர்களும், தமிழகம் முழுவதும் 97% ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர். இதனையடுத்து தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை குறைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய
 
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் திடீர் நிறுத்தி வைப்பா?

கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வராத ஆசிரியர்களின் இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது

இந்த எச்சரிக்கையை அடுத்து இன்று சென்னையில் 99% ஆசிரியர்களும், தமிழகம் முழுவதும் 97% ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர். இதனையடுத்து தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை குறைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் 97 சதவிகிதத்தினர் பணிக்கு திரும்பியதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இன்னும் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் வராவிட்டால் அந்த இடங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

From around the web