மனைவியை அலுவலகத்தில் அடித்தே கொலை செய்த கணவர்

மும்பையில் 35 வயது பெண் ஒருவர் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த அலுவலகத்தில் நுழைந்த அவருடைய கணவர் சரமாரியாக அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியில் உள்ள பயாந்தர் என்ற பகுதியில் நேற்று 35 வயது பெண் ஒருவர் வழக்கம் போல் அலுவலத்திற்கு வந்து தனது பணியை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தார். அலுவலக பணி ஆரம்பித்த சில நிமிடங்களில் வேகமாக வந்த அந்த பெண்ணின் கணவர், சரமாரியாக தனது
 

மனைவியை அலுவலகத்தில் அடித்தே கொலை செய்த கணவர்

மும்பையில் 35 வயது பெண் ஒருவர் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த அலுவலகத்தில் நுழைந்த அவருடைய கணவர் சரமாரியாக அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியில் உள்ள பயாந்தர் என்ற பகுதியில் நேற்று 35 வயது பெண் ஒருவர் வழக்கம் போல் அலுவலத்திற்கு வந்து தனது பணியை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தார்.

அலுவலக பணி ஆரம்பித்த சில நிமிடங்களில் வேகமாக வந்த அந்த பெண்ணின் கணவர், சரமாரியாக தனது மனைவியை அலுவலகத்திலேயே தாக்கினார். இதனால் சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அலுவலக நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து மனைவியை அடித்த கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web