கார்கில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து கார்கில் போரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. இவரது மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1967 ஆம் ஆண்டில் முதல்முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார். அதன்பின் 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த
 

கார்கில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து கார்கில் போரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. இவரது மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1967 ஆம் ஆண்டில் முதல்முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார். அதன்பின் 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று மொத்தம் ஒன்பது முறை எம்பியாக பணியாற்றியுள்ளார்

கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

From around the web