திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிர்வாண சாமியார் நடத்திய மர்ம யாகம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெளர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல பக்தர்கள் குவிவதுண்டு இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் ஒருவர் மர்ம யாகம் நடத்தி வருவதாக ஒருசில பக்தர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்றபோது அங்கிருந்த நிர்வாண சாமியார் ஒருவர் யாகம் நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் நடத்திய மர்ம யாகத்தை போலீசார் தடுத்து
 

திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிர்வாண சாமியார் நடத்திய மர்ம யாகம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெளர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல பக்தர்கள் குவிவதுண்டு

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் ஒருவர் மர்ம யாகம் நடத்தி வருவதாக ஒருசில பக்தர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்றபோது அங்கிருந்த நிர்வாண சாமியார் ஒருவர் யாகம் நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் நடத்திய மர்ம யாகத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

யாகம் நடத்திய காரணம் பற்றி சாமியாரிடம் திருவண்ணாமலை போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நிர்வாண சாமியாரிடம் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்துகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web