ஆசிரியர்கள் போராட்டம்: வழக்கம்போல் கமல்ஹாசனின் குழப்பமான டுவீட்

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் போராட்டம் சரி என்றும், இன்னும் சிலர் போராட்டம் தவறு என்றும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் குழப்பமான ஒரு கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவருடைய டுவீட் இதுதான்: கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை.
 
kamal hassan

ஆசிரியர்கள் போராட்டம்: வழக்கம்போல் கமல்ஹாசனின் குழப்பமான டுவீட்

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் போராட்டம் சரி என்றும், இன்னும் சிலர் போராட்டம் தவறு என்றும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் குழப்பமான ஒரு கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவருடைய டுவீட் இதுதான்:

கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.

பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல். ” என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்தடுவீட்டுகளை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்

From around the web