சிறுத்தை குட்டியை விமானத்தில் கடத்தி வந்த மர்ம நபர் கைது

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சிறுத்தை குட்டியை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பெயர் மொகைதீன் என்பது மட்டும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாய்லாந்தில் இருந்து விமானத்தில் ஏறும்போது ஒரு கூடைக்குள் மறைத்து சிறுத்தையை கடத்தி வந்ததாகவும், அந்த சிறுத்தை குட்டியை அவர் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அவரை பரிசோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த கூடைக்குள்
 


சிறுத்தை குட்டியை விமானத்தில் கடத்தி வந்த மர்ம நபர் கைது

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சிறுத்தை குட்டியை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பெயர் மொகைதீன் என்பது மட்டும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் ஏறும்போது ஒரு கூடைக்குள் மறைத்து சிறுத்தையை கடத்தி வந்ததாகவும், அந்த சிறுத்தை குட்டியை அவர் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அவரை பரிசோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த கூடைக்குள் சிறுத்தைக்குட்டி இருந்ததை கண்டுபிடித்து அதனைபறிமுதல் செய்தனர்

கைப்பற்றப்பட்ட சிறுத்தை குட்டியை மீண்டும் தாய்லாந்துக்கு திரும்ப அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த சிறுத்தைக்குட்டி மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்படவுள்ளது.


From around the web