கொல்கத்தா விரையும் எதிர்க்கட்சி தலைவர்கள்: மம்தாவுக்கு குவியும் ஆதரவு

சிபிஐ அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் பழிவாங்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று முதல தர்ணா போராட்டம் நடத்தி வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் மம்தாவின் இந்த தைரியமான முடிவிற்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்றும் சில தலைவர்கள் வாழ்த்து கூற கொல்கத்தாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். திமுக எம்பி கனிமொழி, ராஷ்டிர ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ்
 


கொல்கத்தா விரையும் எதிர்க்கட்சி தலைவர்கள்: மம்தாவுக்கு குவியும் ஆதரவு

சிபிஐ அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் பழிவாங்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று முதல தர்ணா போராட்டம் நடத்தி வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் மம்தாவின் இந்த தைரியமான முடிவிற்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்றும் சில தலைவர்கள் வாழ்த்து கூற கொல்கத்தாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

திமுக எம்பி கனிமொழி, ராஷ்டிர ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட முக்கிய தலைவர்கள் இன்று கொல்கத்தாவிற்கு விமானம் மூலம் வந்துள்ளனர். இவர்கள் இன்று இரவே மம்தாவை சந்தித்து தங்கள் ஆதரவினை நேரில் தெரிவிக்கவுள்ளானர்.


From around the web