இன்று ஃபேஸ்புக் பிறந்த நாள்: 15 ஆண்டுகளில் அபார வளர்ச்சி

உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமான ஃபேஸ்புக் கடந்த 2004ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப்பட்டது. இந்த 15 ஆண்டுகளில் உலகில் ஃபேஸ்புக் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற அளவில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவின் மார்க் சூகர்பெர்க் என்பவர் இந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்தை கடந்த 2004ம் ஆண்டு பிப். 4ம் தேதி தொடங்கினார். இந்த தளம் தொடங்கப்பட்டபோது மிக குறைவான நபர்களே இந்த தளத்தில் இருந்தாலும் மிகக்குறுகிய காலத்தில் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை அபார
 


இன்று ஃபேஸ்புக் பிறந்த நாள்: 15 ஆண்டுகளில் அபார வளர்ச்சி

உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமான ஃபேஸ்புக் கடந்த 2004ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப்பட்டது. இந்த 15 ஆண்டுகளில் உலகில் ஃபேஸ்புக் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற அளவில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்காவின் மார்க் சூகர்பெர்க் என்பவர் இந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்தை கடந்த 2004ம் ஆண்டு பிப். 4ம் தேதி தொடங்கினார். இந்த தளம் தொடங்கப்பட்டபோது மிக குறைவான நபர்களே இந்த தளத்தில் இருந்தாலும் மிகக்குறுகிய காலத்தில் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை அபார வளர்ச்சி அடைந்தது.

ஆரம்பத்தில் சுமார் 400 முதல் 500 பயனாளிகளே இந்த ஃபேஸ்புக்கில் இருந்த நிலையில் இன்று இந்த தளத்தை மாதம் ஒன்றுக்கு 2.2 பில்லியன் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிறுவனத்தில் சுமார் 30,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுர்கின்றனர். இந்நிறுவனத்திற்கு சராசரியாக ஆண்டொன்றுக்குக் 15934 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் வருகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1,14,31,05,16,00,00,000.00 ஆகும். இந்த எண் எவ்வளவு என்று நீங்களே கூட்டிப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


From around the web